2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனையில் வெள்ளம்

Kogilavani   / 2013 ஜனவரி 05 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

மழையுடனான காலநிலை காரணமாக, அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள பல குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

அட்டாளைச்சேனை மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 9 மற்றும் 5 ஆம் பிரிவுகள், கிழக்குப் பகுதியிலுள்ள 10 மற்றும் 1ஆம் பிரிவுகள் உள்ளிட்ட பல வீடுகளைச் சுற்றி வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரவு பெய்த ஓய்வற்ற கடும் மழை காரணமாக சில வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால், குடியிருப்பாளர்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, தற்போதும் மழை பெய்து வருவதால், வெள்ள அனர்த்தம் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X