2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கல்முனை – மட்டு. போக்குவரத்து தடை

Super User   / 2013 ஜனவரி 07 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்துக்கள் இன்று திங்கட்கிழமை நண்பகல் முதல் தடைப்பட்டுள்ளன.

களுவாஞ்சிக்குடி பிராதான வீதியோரத்திலிருந்த புளிய மரமொன்று வீதியின் குறுக்காக வீழ்ந்துள்ளதாலேயே கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.

கடும் காற்றுடனான மழை பெய்து வருவதன் காரணமாக களுவாஞ்சிக்குடி நுழைவாயில் பகுதியில் இந்த மரம் சரிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த மரத்தினை வீதியிலிருந்து அகற்றி, போக்குவரத்தினை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

  Comments - 0

  • rizlan razick Monday, 07 January 2013 03:52 PM

    malaikum relus itkum arivilai

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X