2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அடிகாயங்களுடன் பெணின் சடலம் மீட்பு

Super User   / 2013 ஜனவரி 17 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன், ஜவீந்திரா)

பொத்துவில், கோமாரி காட்டு பிரதேசத்தில் ஆடு மேய்கச் சென்ற பெண் அடிகாயங்களுடன் சடலமாக நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வசந்த குமார தெரிவித்தார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கோமாரி உச்சிமலை வீதியைச் சேர்ந்த 48 வயதான கந்தப்பெருமாள் ரசிகலா ஆவார்
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆடுகளை மேய்பதற்காக வழமைபோல அருகில் உள்ள உச்சிமலை காட்டு பகுதிக்கு கொண்டுசென்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆடுகளை  மேயப்பதற்காக தனியாக சென்றுள்ளார்.

பெறாமகன் இவருக்கு பகல் சாப்பாடு கொண்டு சென்றபோது அங்கு சிறிய தாயாரை காணவில்லை.
இதனையடுத்து பெறாமகன் திரும்பி வீட்டுக்கு வந்துபோதும் இவர் இரவாகியும் வீட்டிற்கு வராததையடுத்து அருகில் உள்ள இராணுவ முகாமில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இராணுவத்தினரும் உறவினர்களும் இணைந்து நேற்று புதன்கிழமை காட்டுப் பகுதியை சுற்றி தேடிய போது அடிகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாரை போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயிரிழந்தவரின் கணவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்ததையடுத்து, இவர் தனிமையாக வாழ்ந்து வருகின்றார்.

இவரின் ஜீவனோபாய தொழிலாக ஆடுகளை வளர்த்து வருவதாகவும் சம்பவ தினம் மேச்சலுக்கா கொண்டு சென்ற ஆடுகளில் மூன்றைக் காணவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில்  தெரியவந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X