2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

கல்முனையில் எருமை மாட்டிறைச்சி விற்பனை நிலையம் முற்றுகை

Menaka Mookandi   / 2013 ஜனவரி 18 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-அப்துல் அஸீஸ்


தடை செய்யப்பட்ட எருமை மாட்டிறைச்சி விற்பனை நிலையமொன்றை கல்முனை பொலிஸார் இன்று முற்றுகையிட்டதுடன் சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.

சாய்ந்தமருது பொலிவேரியம் வீட்டுத்திட்டத்திற்கு பின்புறமாக அறுக்கப்பட்ட நிலையில் 5 எருமை மாடுகளின் இறைச்சிகள் விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக சிறிய கெண்டர் வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையிலேயே அந்நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையின் பின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 3 நபர்களும் கெண்டர் வாகனத்துடனான எருமை மாட்டு இறைச்சிகளையும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X