2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பொத்துவிலில் வீடுகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 18 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.மாறன்


வேள்ட் விஷன் நிறுவனம் பொத்துவில் பிரதேசத்தில் வீடுகள் இல்லாத வருமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் 35 பேருக்கு தலா 2 இலச்சத்து 50 ஆயிரம் ரூபாவையும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் பங்களிப்புடன் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கும் நிகழ்வும் சுயதொழிலுக்காக தொழில் பயிற்சிளை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை பொத்துவில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக பொத்துவில் பிரதேச செயலாளர் ஜ.எல்.எம்.தௌபீக், வேள்ட் விஷன் நிறுவன பொத்துவில் பிராந்திய முகாமையாளர் ஜ.மைக்கல், திட்ட இணைப்பாளர் எல்.தயாளன், திட்டகண்காணிப்பு இணைப்பாளர் ஜி.உமாகரன், செக்டா நிறுவனத் தலைவர் கே.சதாசிவம், ஆகியோர் கலந்து கொண்டு கையடக்க தொலைபேசி திருத்துதல், ஹோட்டல் முகாமைத்துவம், கிராம பொருளாதார வியாபார தனிமனித ஆலோசனை போன்ற பயிற்சிகளை பூர்த்தி செய்யப்பவர்களுக்கு சான்றிதழ்களும் நிர்மானிக்கப்பட்ட   வீடுகளையும் கையளித்தனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X