2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தேசிய காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்திலிருந்து முக்கியஸ்தர்கள் பலர் வெளிநடப்பு

A.P.Mathan   / 2013 ஜனவரி 19 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹனீக் அஹமட், எம்.பரீத்

தேசிய காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்திலிருந்து அந்தக் கட்சியின் உப தலைவரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இன்று காலை வெளிநடப்புச் செய்துள்ளனர்.

அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியானது திருகோணமலை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், கட்சியின் உயர்பீடத்தில் திருகோணமலை மாவட்டப்  பிரதிநிதிகள் யாரும் அடையாளப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தே அவர் வெளிநடப்புச் செய்துள்ளார்.

இதன்போது தேசிய காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிண்ணியா நகரசபை உறுப்பினர் பாஜில் குத்தூஸ், கிண்ணியா பிரதேசசபை உறுப்பினர் நிஃமதுல்லா ஆகியோருடன் திருகோணமலை மாவட்டத்தின் தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸுடன் இணைந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அக்கரைப்பற்று கடற்கரை பங்களாவில் இன்று சனிக்கிழமை காலை அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீடக் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே இவ் வெளிநடப்பு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில், வெளிநடப்பில் ஈடுபட்ட தேசிய காங்கிரஸின் உப தலைவரும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸை தொடர்பு கொண்டு கேட்டபோது – தான் வெளிநடப்புச் செய்தமையினை உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்;

இரண்டு நாட்களுக்கு முன்னர் தேசிய காங்கிரஸின் அமைப்பாளரும், கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்றைய தினம் (19 ஆம் திகதி) தேசிய காங்கிரஸின் வருடாந்த மாநாடு அக்கரைப்பற்றில் இடம்பெறவுள்ளதாகவும், காலை 10 மணிக்கு கட்சியின் உயர்பீடக் கூட்டம் இடம்பெறும் என்றும் கூறி - இரண்டு நிகழ்வுகளிலும் என்னைக் கலந்து கொள்ளுமாறு அழைத்தார். 

அதற்கிணங்க இன்று காலை அக்கரைப்பற்று கடற்கரை பங்களாவுக்குச் சென்றிருந்தேன். மேலே ஒரு கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அமைச்சர் அதாவுல்லா என்னை கீழே காத்திருக்குமாறு கூறினார். பின்னர், என்னை அடையாளம் கண்டுகொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்னை மேலே செல்லுமாறு கூறினார்கள். நான் சென்றபோது, அங்கு உயர்பீடக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் திருகோணமலையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எவரும் இருக்கவில்லை.

இதைக் கண்ணுற்ற நான் - உயர்பீடக் கூட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எவரும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினேன். எமது மாவட்டத்தைப் புறக்கணிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கட்சியில் தொடர்ந்தும் இருப்பதில் என்ன அர்த்தம் என்று கேட்டு விட்டு வெளிநடப்புச் செய்தேன். என்னுடன் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கிண்ணியா நகரசபை உறுப்பினர் பாஜில் குத்தூஸ், கிண்ணியா பிரதேசசபை உறுப்பினர் நிஃமதுல்லா ஆகியோரும் கட்சியின் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய ஆதரவாளர்களும் வெளியேறினர்.

நான் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர். திருகோணமலை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியினை அறிமுகம் செய்தவர்களில் நான் முக்கியமானவர். ஆனால், தேசிய காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தை கணக்கில் எடுக்காமல் தொடர்ந்தும் புறக்கணித்தே வருகிறது. உதாரணமாக, கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் அமைச்சில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

தேசிய காங்கிரஸ் கட்சியின் மீது நான் நம்பிக்கை இழந்து விட்டேன். என்னுடைய தனிப்பட்ட நலனுக்ககாக கட்சியில் இருந்து கொண்டு – வாக்களித்த மக்களை ஏமாற்ற முடியாது.

எனவே, திருகோணமலை மாவட்டத்திலுள்ள எமது ஆதரவாளர்களை நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து – எதிர்காலத்தில் நாம் எத்தகைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று கலந்தாலோசிக்கவுள்ளோம்' என்றார்.

  Comments - 0

  • bzukmar Saturday, 19 January 2013 05:07 PM

    நீங்கள் இன்னுமொரு அதிருப்தி தேசிய காங்கிரஸ் கட்சி ஒன்றை உருவாக்குங்கள்.மு.கா.வின் கூர்ப்பு அ .இ.மு.கா.,தே.கா. அதிலிருந்து அ.தே.கா. இறுதியில் எல்லாமே மகி கேள்விக்கு விலையாகி சோரம் போன சோளியல் அரசியல்...

    Reply : 0       0

    avathani Saturday, 19 January 2013 05:13 PM

    சபாஷ் சரியான போட்டி

    Reply : 0       0

    Nusky Saturday, 19 January 2013 05:17 PM

    இது தேசிய கான்கிரஸ் இல்லை... அக்கரைப்பற்று கான்கிரஸ் பா...

    Reply : 0       0

    avathanee Saturday, 19 January 2013 10:21 PM

    இப்போது புரிந்ததா தீயவரின் நட்பு தீங்கு என்று... தலைவருக்குரிய எந்த தகுதியும் இவரிடம் இல்லை... இவர்களா முஸ்லீம்களின் தலைவர்கள்.. முஸ்லீம் சமூகம் எவ்வாறு உருப்படும்..

    Reply : 0       0

    muheeth Sunday, 20 January 2013 12:48 AM

    ithuthan kuthery oduthal enpathu.

    Reply : 0       0

    Irshathmnm Sunday, 20 January 2013 02:33 AM

    தேசிய காங்கிரஸ் அக்கரைப்பற்றுக்கு மாத்திரம் உரிய கட்சியல்லவா. இது தெரியாதா உங்களுக்கு?.. இந்த தலைவர் போகிற இடமெல்லாம் கல்லு நாட்டுவார். ஆனால் அக்கரைப்பற்றில் மட்டும்தான் கட்டுவார். தோப்பூரில் பி.செ.கட்டிடத்துக்கு கல்லு நாட்டி 6 வருடம். கல்லில் மாடு படுக்குது.

    Reply : 0       0

    mo Sunday, 20 January 2013 03:09 PM

    இது ஒரு அரசியல் கட்சி மாநாடு என்றால் பரவாயில்லை. எப்பயோ செய்ய வேண்டியது. காலம் கடந்த ஞானம்.

    Reply : 0       0

    kalifa Sunday, 20 January 2013 07:58 PM

    kaalam kadantha jaanam. eththanai naalthan suyanalawaathiyaha waalvathu.

    Reply : 0       0

    S.Sinasudeen Monday, 21 January 2013 06:18 AM

    தேசிய காங்கிரஸ் அக்கரைப்பற்றுக்கு மாத்திரம் உரிய கட்சியல்லவா. இது தெரியாதா உங்களுக்கு?.. இந்த தலைவர் போகிற இடமெல்லாம் கல்லு நாட்டுவார். ஆனால் அக்கரைப்பற்றில் மட்டும்தான் கட்டுவார்.

    Reply : 0       0

    vaasahan Monday, 21 January 2013 08:31 AM

    ஊரானை இன்றுவரை திரும்பியும் பார்க்காதவர் உங்களைக் கவனிக்காததில் வியப்பில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X