2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

திருக்கோவிலில் ஆயுதங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 22 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.மாறன்

திருக்கோவில், தம்பட்டை பிரதேசத்திலுள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

முற்றத்தை துப்பரவு செய்துகொண்டிருந்தபோதே புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆயுதங்கள் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

ரி 56 ரக துப்பாக்கியொன்றுடன் 3 மகசீன்களையும் 50 ரவைகளையும் பொலிஸார் இவ்வாறு மீட்டுள்ளனர்.

முற்றத்தை வெட்டி துப்பரவு செய்துகொண்டிருந்தபோது, துப்பாக்கியொன்று தென்பட்டுள்ளது. இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார்  ரி 56 ரக துப்பாக்கியையும் 3 மகசீன்களையும்  50 ரவைகளையும் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.

இதேவேளை, சுனாமி அனர்த்தத்தால் இவ்வீடு பாதிக்கப்பட்ட நிலையில் இவ்வீட்டு உரிமையாளர்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.  2 வருடங்களுக்கு முன்னர் இவ்வீட்டு உரிமையாளர்கள் இவ்வீட்டில் மீண்டும் குடியேறியிருந்தனர். இவர்கள் இன்றையதினம் வீட்டின் முற்றப்பகுதியை துப்பரவு செய்துகொண்டிருந்தபோதே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணையை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X