2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மீன்களை திருடியவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 24 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.மாறன்

மீன்களைத் திருடியதாகக் கூறப்படும் ஒருவரை எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.றிஸ்வி உத்தரவிட்டார்.

கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இச்சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதிபதி இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் சவளைக்கடை பொலிஸார் தெரிவிக்கையில், 

அம்பாறை, சவளைக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  அன்னமலை பிரதேசத்தில் விற்பனைக்காக வைத்திருந்த மீன்களைத் திருடியதாகக் கூறப்படும் ஒருவர் பிடிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் 119 என்ற அவசரசேவை தொலைபேசிக்கு அறிவிக்கப்பட்டது.  

நேற்று புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் மீனவரொருவர் ஆற்றிலிருந்து பிடித்துக்கொண்டுவந்த 11 விரால் மீன்களையும் முற்றத்தில் வைத்துவிட்டு வியாபாரியொருவருக்கு தொலைபேசியில் தெரிவிப்பதற்காக வீட்டினுள்ளே சென்றுள்ளார். பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது அம்மீன்களைக் காணவில்லை

இந்நிலையில், இம்மீன்களை  ஒருவர் திருடிக்கொண்டு போவதை மீனவரின் மனைவி கண்டுள்ளார். மீன்களைத் திருடியதாகக் கூறப்படுபவரின் வீட்டுக்குச் சென்று 2 விரால் மீன்களுடன் இவரைப் பிடித்துள்ளதுடன், பொலிஸாரின் 119 என்ற அவசரசேவை தொலைபேசிக்கு அறிவிக்கப்பட்டதாகக் கூறினர். 

  Comments - 0

  • ravi Thursday, 24 January 2013 10:18 AM

    நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சமே இதற்கு காரணம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X