2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அட்டாளைச்சேனையில் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 25 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


தற்போது தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழையால் அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகளும் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கிவருகின்றன.

இப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு பெய்த அடை மழையால் பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளம் வடிந்தோட முடியாமலுள்ள இடங்களில் இயந்திரங்களைக் கொண்டு வடிகான்களிலுள்ள தடைகளை அகற்றும்  நடவடிக்கைகளை அட்டாளைச்சேனைப் பிரதேசசபையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க, தற்போதைய வெள்ள நிலைமையால் டெங்கு நோய் உட்பட நோய்த் தொற்றுக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளமையால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் ஒலிபெருக்கி மூலம் இன்று பிரதேசம் முழுவதும் அறிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்கள் பெய்த மழையின்போது வெள்ளத்தில் மூழ்கியிராத பல இடங்கள், கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையால் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X