2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 26 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்துப் பாதைகள் தடைப்பட்டுள்ளன.

சம்மாந்துறை காரைதீவு வீதியிலுள்ள மாவடிப்பள்ளி தாம்போதி, கல்முனை நாவிதன்வெளி பிரதேசத்துக்கான கிட்டங்கி தாம்போதி, சம்மாந்துறை மண்டூர் வீதியிலுள்ள முறிகண்டி வீதி, சம்மாந்துறை அம்பாறை சம்மாந்துறை வீதியிலுள்ள வளத்தாப்பிட்டி வீதி, அம்பாறை இங்கினியாகலை வீதியிலுள்ள கொண்டவட்டுவான் அனைக்கட்டு வீதி என்பவற்றின் மேலாக வெள்ள நீர் பல அடிகள் பாய்ந்து செல்வதனால் அவ்வீதிகளில் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது.

அவசர பணிகளின் நிமித்தம் பிரயாணம் செய்ய வேண்டியுள்ள வாகனங்களின் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பிரயாணங்களை மேற்கொள்ளுமாறும் குறித்த பிரதேசங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள இரணுவத்தினரும் பொலிஸாரும் சாரதிகளை அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் மற்றும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் செயலாளர் ரீ.ஜெயாகர் ஆகியோர்கள் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கடலும் களப்பும் அருகருகே சந்திக்கின்ற சின்ன முகத்துவாரம் பிரதேசத்தில் வடிகான்கள் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் பணங்காட்டு பாலத்தின் கீழ் அடர்ந்த காணப்படும் சல்வீனியா தாவரத்தை கனரக இயந்திரத்தின் உதவியுடன் அப்புரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X