2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 26 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹனீக் அஹமட்

பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.றம்ஸானுக்கு நபரொருவரால் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில்; முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீசின் செயலாளர் எனக் கூறப்படும் தௌபீக் என்பவரே – நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5;.50 மணியளவில் தனக்கு தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுத்ததாக ஊடகவியலாளர் றம்ஸான் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்று சனிக்கிழமை காலை – அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் நபர் கல்முனைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டதோடு, அவரின் வாக்கு மூலமும் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டது.

இருந்தபோதும், எதிர்காலத்தில் இது போன்ற நடவடிக்கைகளில் தான் ஈடுபட மாட்டேன் என்று அச்சுறுத்தல் விடுத்தவர் கூறியதையடுத்து, இவ்விவகாரம் சமாதானமாகத் தீர்த்து வைக்கப்பட்டதாக ஊடகவியலாளர் றம்ஸான் தெரிவித்தார்.

தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு நேற்றைய தினம் ஊடகவியலாளர் றம்ஸான் அனுப்பி வெளியாகியிருந்த செய்தியொன்று தொடர்பாகவே – அவர் அச்சுறுத்தப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0

  • nilam Saturday, 26 January 2013 04:33 PM

    அது ஒரு பூச்சியம் ரம்சான் கவலை வேண்டாம்.

    Reply : 0       0

    Irshathmnm Sunday, 27 January 2013 02:41 AM

    முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் இப்படியான வேலைகளைச் செய்வதில் வல்லவர்கள். முதலில் உங்கள் தலைவரை பதவி விலகும்படி அச்சுறுத்துங்கோ!.....அது சமூகத்துக்குச் செய்யும் உதவியாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X