2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வீதியின் குறுக்காக ஓடும் கடல்; ஒலுவிலில் கடலரிப்பின் தீவிரம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 30 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


ஒலுவில் துறைமுகப் பகுதில் ஏற்பட்டு வரும் கடலரிப்பின் காரணமாக வெளிச்ச வீட்டுக்கு அருகில் அமைந்திருந்த தார் வீதியின் ஒரு பகுதி முற்றாக அழிவடைந்துள்ளது. இதனால் கடல், அருகிலுள்ள ஆற்றினுள் புகுந்துள்ளது. இதனால், தற்போது கடலுக்கும் நிலப் பகுதிக்கும் இடையில் இருந்த வீதியின் சுமார் 10 மீற்றர் அளவு பகுதி கடல் அரிப்பால் அழிவடைந்துள்ளது.

இதனையடுத்து கடல் தற்போது இந்த வீதி இருந்த பகுதியியூடாக அருகில் உள்ள ஆற்றினுள் புகுந்துள்ளது. வீதியின் ஏனைய பகுதிகளும் அழிவடையுமாயின் கடல் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வேகமாக நகரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி கடலரிப்பினால் இங்குள்ள மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இந்தப் பகுதியில் இருந்த 87 மீனவர் வாடிகளில் 03 வாடிகளே எஞ்சியுள்ளதாக இங்குள்ள மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், தற்போது வெளிச்ச வீட்டுக்கு அருகிலுள்ள வீதியின் ஒரு பகுதி கடலினுள் மூழ்கியதையடுத்து மீனவர்கள் தமது மீன்களை உரிய இடங்களுக்குக் கொண்டு செய்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதை அவதானிக்க முடிகிறது. தற்போது கடல் அரித்த பகுதியின் ஊடாக கடல் நீரினைக் கடந்தே தமது மீன்களோடு மீனவர்கள் பயணிகின்றனர்.

தற்போது, வீதியின் குறுக்காக கடல் செல்வதால் வீதியின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிக்குச் செல்வதற்காக பொதுமக்கள் சுமார் 02 கிலோமீற்றர் சுற்றி வளைத்துப் பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X