2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி கொண்டுவந்த மாடுகளை அரச பண்ணையில் ஒப்படைக்க உத்தரவு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.மாறன்

அனுமதிப்பத்திரமின்றி கொண்டுவந்த 5 மாடுகளையும் அரசாங்கப் பண்ணையில் ஒப்படைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.றிஸ்வி  உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து அம்பாறை, கல்முனை பிரதேசத்திற்கு அனுமதிப்பத்திரமின்றி இந்த 5 மாடுகளும் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 22ஆம் திகதி இந்த 5 மாடுகளும் கால்நடையாக கல்முனை, நற்பட்டிமுனை பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, சவளக்கடை பிரதேசத்தில் இம்மாடுகளை பொலிஸார் கைப்பற்றியதுடன், ஒருவரையும் கைதுசெய்தனர்.

கைப்பற்றப்பட்ட மாடுகளுடன் இச்சந்தேக நபரை பொலிஸார் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, இச்சந்தேக நபருக்கு 5,000 ரூபா அபராதம் விதித்து நீதிபதி அவரை விடுவித்தார்.

இந்நிலையில், இம்மாடுகள் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்றுவந்தது.  நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட  கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.றிஸ்வி, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மாடுகளை அரசாங்கப் பண்ணையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த மாடுகளை  மொனராகலையில் உள்ள அரசாங்கப் பண்ணையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X