2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மீள் நிரப்ப கள்ளநோட்டை கொடுத்தவருக்கு வலை வீச்சு

Kanagaraj   / 2013 பெப்ரவரி 02 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கையடக்க தொலைபேசிக்கான கட்டண கணக்கை மீள் நிரப்புவதற்கான அட்டையை பெற்றுக்கொண்டு 1000 ரூபா கள்ளநோட்டை கொடுத்தவரை தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர்.

இந்த சம்பவம் அம்பாறை இங்கினாகல பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

கையடக்க தொலைபேசி கட்டணங்களை மீள்நிரப்பும் தொலைபேசி நிலையத்தின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த சந்தேகநபர் அம்பாறையிலுள்ள விஹாரையில் இருந்தவர் என்று தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X