2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா,-எஸ்.எம்.எம்.றம்ஸான்,-எம்.சி.அன்சார்

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர் திடீரென விழுந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறை மலையடிக்கிராமம் முதலாம் பிரிவைச் சேர்ந்த சம்மாந்துறை பிரதேச சபையின் ஊழியரான முகம்மது அலியார் அப்துல் சலாம் (கபீர்) (வயது  42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறை - கல்முனை பிரதான வீதியிலுள்ள மாவடிப்பள்ளி அறுவக்கொட்டன் பாலத்தடியிலேயே நேற்று சனிக்கிழமை இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர் காரைதீவு பிரதேசத்திலிருந்து சம்மாந்துறை நோக்கி வந்துகொண்டிருந்த இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் கல்முனை அஷ;ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான விசாரணையை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0

  • najeem Sunday, 10 February 2013 04:01 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X