2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

திருக்கோவிலில் பொலிஸ் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


தேசத்துக்கு மகுடம் வேலைத் திட்டத்தின் கீழ், திருக்கோவில் பிரதேசத்தில் பொலிஸ் நடமாடும் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டது.

திருக்கோவில் இரண்டாம் பிரிவு - கிராம அபிவிருத்தி சங்கக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மேற்படி பொலிஸ் நடமாடும் சேவையானது பொதுமக்கள் இலகுவாக சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மார்ச் மாதம் இரண்டாம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.

தேசிய அடையாள அட்டைகளைக்கு விண்ணப்பித்தல், தொலைந்து போன சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் கடவுச்சீட்டு போன்றவற்றுக்கான பொலிஸ் முறைப்பாட்டுப் பத்திரங்களையும், மேலும் பல சேவைகளையும் இந்த நடமாடும் சேவையின் போது பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.யு.வி.தென்னக்கோன் தலைமையில்  மேற்படி நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றபோது, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஐ.எம்.கருணாரத்ன, திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம். கோபாலரெத்தினம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X