2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இராணுவ அதிரடிப் படையின் சுற்றுலாத் துறை கற்கை நெறி

Super User   / 2013 பெப்ரவரி 18 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரால் லால் பெரேராவின் வழிகாட்டலில் கீழ் கல்வியமைச்சின் ஈ.கே.எஸ்.பி திட்டத்துடன் இணைந்து இராணுவ அதிரடிப் படையின் மூன்றாவது பிரிவு நடாத்தும் சுற்றுலாத் துறை கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று திங்கட்கிழமை அம்பாறை சேவா லங்கா பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்குடன் நடத்தப்படும் மேற்படி சுற்றுலாத்துறை தொடர்பான கற்கை நெறியானது எவ்வித கட்டணங்களுமின்றி முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி சுற்றுலாத்துறை கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வில், விரிவுரையாளரும் 'கேஸ்ப்' கற்றலின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொஷான் டெலிம, இராணுவ அதிரடிப் படை பிரிவு 03ன் அம்பரை மாவட்ட சிவில் நிருவாக அதிகாரி கேர்ணல் தென்னக்கோன், மேஜர் நவரட்ண உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X