2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'நிதானமாகச் சிந்தித்து செயற்பட வேண்டிய காலகட்டத்தில் வாழ்கின்றோம்'

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 25 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் புத்திக்கூர்மையுடன் நிதானமாகவும் சிந்தித்து செயற்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தமது மக்களுடைய அபிலாஷைகளை அரசியல் தலைமைகளின் புத்திக்கூர்மையினால் வென்றெடுக்க வேண்டியுள்ளது என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் மக்கள் சந்திப்பும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை சென்னல் கிராமத்தில் உள்ள எம்.எல்.ஏ.மஜீட் தோப்பில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் தலைமையில் இந்தக் கலந்துரையாடலும் மக்கள் சந்திப்பும் நடைபெற்றது.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'கடந்த மாகாண சபைத் தேர்தல் காலங்களில் அரசியல் மேடைகளில் வீரவசனங்கள் பேசி மக்களின் உணர்வுகளை சூடாக்கிய அரசியல் தலைமைகள் இன்று நாட்டில் நடைபெற்று வருகின்ற சில செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் வெட்கித்து  தலைகுனிந்துள்ளனர். அன்று யதார்த்த நிலைகளை தெளிவாக எடுத்துக் கூறியும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அப்பாவிப் பொதுமக்களை இனவாத கருத்துக்களின் மூலம் சலவை செய்து மக்களை சிந்திக்கச் செய்ய முடியாதவாறு சில முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் செயற்பட்டது.

அதனால் அந்தத் தலைமைகள் வெளிப்பாங்கில் வெற்றி பெற்றுள்ளதாக நினைத்துக்கொண்டு உள்ளார்ந்த மகா தோல்விகளை தளுவிக்கொண்டு இன்று பல தடுமாற்றங்களையும் ஏமாற்றங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.

பொய்யான கருத்துக்களும் செயற்பாடுகளும் ஒருபோதும் நீடித்து நிலைக்காது. நாம் உண்மையாக சிந்தித்து தீர்க்கமான முடிவுகளின் மூலம் பெற்றுக்கொள்கின்ற வெற்றிகள் எமக்கு தொடர்ந்தும் துணை நிற்கும்' என்றார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா கலந்த கொண்டார். கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி  நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை. மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  
                                        

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X