2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அதிகளவு பாரத்துடன் டிப்பர் வாகனம் பயணித்ததால் பாலம் உடைவு

Super User   / 2013 பெப்ரவரி 27 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யூ.எல்.மப்றூக்


அட்டாளைச்சேனை - கோணாவத்தை சின்ன பாலத்தினூடாக டிப்பர் ரக வாகனமொன்ற பயணித்த வேளை - பாலம் திடீரென உடைந்ததால், குறித்த வாகனம் உடைவினுள் சிக்கியுள்ளது.

குறித்த டிப்பர் ரக வாகனம் - கொங்றீட் கட்டிட வேலைக்கான சிறிய கற்களை ஏற்றிக் கொண்டு பயணித்த போதே மேற்படி அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

அதிகளவு பாரத்துடன் வாகனம் பயணித்தமையே பாலம் உடைவதற்குக் காரணம் என கூறப்படுகிறது. ஆயினும், இதன்போது எவரும் பாதிக்கப்படவில்லை.

இதேவேளை, மேற்படி பாலத்தினூடாக - இவ்வாறான பாரிய வாகனங்கள் செல்வதற்கு அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாலத்தின் கீழ் - கோணாவத்தைப் பகுதிக்கான குடிநீர் இணைப்புக்குரிய பாரிய குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



  Comments - 0

  • meenavan Wednesday, 27 February 2013 07:06 PM

    பாலத்தின் மேலாக செல்லக்கூடிய வாகன உச்ச நிறை பற்றிய பெயர் பலகை நடப்பட்டு இருந்திருந்தால் பாலத்தின் சேதத்தை தவிர்த்து இருக்கலாம். வீதி அதிகார சபையினரே இது உங்களது கவனத்துக்கு.....????

    Reply : 0       0

    vallarasu Thursday, 28 February 2013 09:30 AM

    தம்பி சாரதி அந்த பாலம் ஏற்கனவே உடைந்துள்ளது தெரிந்தும் போய்....... ஐயோ

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X