2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கிணற்றிலிருந்து சிறுத்தைக் குட்டி மீட்பு

Menaka Mookandi   / 2013 மார்ச் 04 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.சரவணன்


திருக்கோவில் பிரதேசதத்தில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று மீட்கப்பட்டுள்ளது.  திருக்கோவில் முதலாம் பிரிவு உதயசூரியன் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து அம்பாறை மாவட்ட வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் இந்த சிறுத்தைப் புலிக்குட்டி மீட்கப்பட்டுள்ளது.

வீட்டு உரிமையாளர், கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு சென்றபோது கிணற்றில் சிறுத்தைப் புலிக்குட்டி ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அம்பாறை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி தலைமையில் வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கிணற்றில் இருந்த சிறுத்தைப் புலிக்குட்டியை மீட்டு எடுத்துச் சென்றனர்.

இந்த புலிக்குட்டி காட்டில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் வந்த நிலையில் கிணற்றில் தவறி வீழ்ந்திருக்கலாம் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0

  • IBNU ABOO. Tuesday, 05 March 2013 03:47 PM

    இப்போ நிஜப்புலிகள் தமிழ் கிராமங்களில் ஊடாடி வருவது ஓர் அதிசயமான சம்பவமா அல்லது எதிர்வுகூறலா..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X