2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அம்பாறையில் மீண்டும் மழை

Menaka Mookandi   / 2013 மார்ச் 04 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


அம்பாறை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பெய்து வரும் தொடர்மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி வருகிறது. குறிப்பாக, கரையோரப் பிரதேசங்களிலுள்ள வீதிகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள் வெள்ள நீர் தேங்கத் தொடங்கியுள்ளன.

திடீரென மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் - மாவட்டத்தில் நடைபெற்று வரும் நெல் அறுவடை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் - பெய்த கடும் மழை காரணமாக, மாவட்டத்தின் நெல் அறுவடைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போதைய மழையானது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

இதேவேளை, வடிகான்களும் - நிரம்பி வழியத் தொடங்கியுள்ளதால் வீதிகளில் வெள்ளநீர் பரவ ஆரம்பித்துள்ளன. மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X