2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வடிகான் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 06 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


கல்முனை சந்தை வீதி, மற்றும் வடிகான் அமைப்பதற்கான வேலைத்திட்டம் நேற்று மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

புற நெகும அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 7,490,10 ரூபா செலவில் குறித்த வீதி, வடிகான் என்பன அமைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் மாநகர பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், எச்.எம்.எம்.நபார், கல்முனை சந்தை வர்த்தக சங்க பிரதிநிதிகள், சர்வ மத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இப்பிரதான வீதி பல வருடங்களாக குன்றும் குழியுமாக காணப்பட்டது. மழை காலங்களில் இவ்வீதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுண்டு. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




  Comments - 0

  • meenavan Wednesday, 06 March 2013 08:23 AM

    நாங்கள் எம்.பி,யை தேடுகிறோம் முகவெற்றிலை நகரின் காவலன் (நினைப்பு) எந்த வைபவங்களிலும் காணோம் அவருக்கு. வாக்களித்ததன் கைமாறு இது தானோ...??? கட்சி தலைமையையும் எதிர்த்து ஊரையும் புறக்கணித்து என்னதான் செய்யவுள்ளாரோ....???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X