2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

உடும்பு வைத்திருந்தவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 06 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராஜா சரவணன்

உடும்பு ஒன்றை வைத்திருந்த ஒருவருக்கு 20,000 ரூபா தண்டம் விதித்து கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.றிஸ்வி தீர்ப்பளித்துள்ளார்.

இதேவேளை, குறித்த உடும்பை நீதிபதி தன் முன்னிலையில் அவிழ்த்து விடுவித்துள்ளார்

அம்பாறை, மத்திய முகாம் மயானத்துக்கு அருகில் உடும்பு ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில்; பிடித்துக்கொண்டு வந்த ஒருவரை கைதுசெய்துள்ளதுடன், குறித்த உடும்பையும் மீட்டுள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை  இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.றிஸ்வி தண்டம் விதித்து தீர்ப்பளித்ததுடன், குறித்த உடும்பையும் அவிழ்த்து விடுவித்துள்ளதாக பொலிஸார் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X