2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சிறுவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 மார்ச் 06 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்களிலுள்ள பாடசாலை செல்லும் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று சம்மாந்துறையிலுள்ள சிறுவர் நன்னடத்தை அலகுக் காரியாலயத்தில் நடைபெற்றது.

நீதிமன்றங்களின் கட்டளைகளுக்கு அமைவாக சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

சிரேஷ்ட மாவட்ட நன்னடத்தை அதிகாரி எ.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய சிறுவர் பராமரிப்பு துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பொதுசன தொடர்பு அதிகாரி யூ.எல்.பஸீர், இணைப்பதிகாரி ஏ.எம்.தபீக் உட்பட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளான வை.பி.லாபீர், ஆர்.விஜிதரன், எஸ்.சிவகுமார், ரீ.வினோதினி, ஏ.தஸ்லீமா உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது 132 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இக்காசோலைகள் வழங்கப்பட்டன.



  Comments - 0

  • ibnuaboo Wednesday, 06 March 2013 01:02 PM

    வரவேற்க வேண்டிய மனிதாபிமான உதவித்திட்டம். ஆனால் தமிழ் நாட்டில் இப்படியான உதவிதிட்டங்கள் மூலம் உரிய அதிகாரிகள் பலர் பகல் கொள்ளை அடித்துள்ளதும் எனக்கு நினைவுக்கு வருகிறது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X