2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மகளிர் தினத்தை முன்னிட்டு வீடுகள் கையளிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 07 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்முனை சமுர்த்தி வலயத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட மகளீர்களுக்கான வீடுகள் கையளிக்கும் நிகழ்வும் தொழில் முயற்சிக்கான கடன் உதவிகள் வழங்கும் நிகழ்வும் இன்று வியாழக்கிழமை கல்முனை சமுர்த்தி வலயப்பிரிவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட மகளீpர்களுக்காக அமைக்கப்பட்ட 'திரியபியச' வீடுகள் 4 கையளிக்கப்பட்டதுடன், மகளீர்களின் தொழில் முயற்சிக்கான கடன் உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

கல்முனை வலய வங்கி சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.அன்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் அதிதிகளாக கல்முனை பிரதேசசெயலாளர் எம்.எம்.நௌபல், சமுர்த்தி தலைமைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X