2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சாயி பஜனையில் இசை கருவி வாசித்தவர் உயிரிழப்பு

Kogilavani   / 2013 மார்ச் 11 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

அம்பாறை, காரைதீவில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சாயி பஜனையில் இசை கருவியை வாசித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காரைதீவைச் சேர்ந்த சீவரெட்னம் (65வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிவராத்திரி தினத்தையொட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இன்று திங்கட்கிழமை காலை வரை காரைதீவு சாயி சமித்தியில் பஜனைகள் இடம்பெற்றுவந்தன.

குறித்த நபர் பஜனையில் டோல்;கி இசைக் கருவியை  வாசித்துள்ளார். இந்நிலையில் அவர் வாத்தியக் கருவியினை வாசித்துகொண்டிருந்த நிலையிலே நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

பின்னர் அவர், கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் அவர்  ஏலவே உயிரிழந்துவிட்டதாக   வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X