2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஸாஹிரா கல்லூரி மாடிக்கட்டடத்தின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்துள்ளது

Super User   / 2013 மார்ச் 12 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-றிப்தி அலி, எஸ்.எம்.எம்.ரம்ஸான்


கல்முனை ஸாஹிரா கல்லூரியின் மூன்று மாடிக்கட்டடித்தின்; ஒருபகுதி இன்று அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளது. சுமார் 15 வகுப்பறைகளை கொண்ட இந்த கட்டிடம் கடந்த 1992ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

அத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அர்த்தத்தினால் இந்த கட்டிடம் கடுமையாக சேதமடைந்திருந்தது. எனினும் கடந்த வருட முற்பகுதியில் இந்த கட்டிடம் பயன்படுத்த முடியாது என கல்முனை ஸாஹிரா கல்லூரியின அதிபர் ஏ.எம்.ஆதம்பாவா தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

"எனினும் இந்த வருடம் கல்லூரிக்கு கூடுதலான மாணவர்கள் அனுமதிகப்பட்டமையினால் இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் குறித்த கட்டிடத்தை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தோம்" என அவர் குறிப்பிட்டார்.

இந்த கட்டிடத்தில் நேற்று வரை 4 வகுப்புகள் தற்காலிகமாக இயங்கின.இந்த சம்பவம் பாடசாலை நேரத்தில் ஏற்பட்டிருந்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.

"இந்த கட்டிடம் இடிந்துள்ளமையினால் மீண்டும் வகுப்பறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கான மாற்றீடு தொடர்பாக ஆராய்வதுடன் உயர் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது" என அதிபர் ஆதம்பாவா மேலும் தெரிவித்தார்.

கல்முனை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ,எம்.சலீம் மற்றும் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் ஹாசீம் உள்ளிட்ட பலர் கட்டிட இடிந்துள்ளமையை பார்வையிடுட்டனர்.








  Comments - 0

  • rinsaaf Wednesday, 13 March 2013 02:25 PM

    நான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X