2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஹூகோ சாவோசின் மறைவுக்கு சாய்ந்தமருதில் அனுதாபம்

Super User   / 2013 மார்ச் 12 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


மறைந்த வெனிசுலா ஜனாதிபதி ஹூகோ சாவோசின் மறைவுக்கு சாய்ந்தமருது பிரதேசத்தில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் மறைவு தொடர்பான அனுதாப பதாதை கல்முனை மாநாகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் பதாதைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மக்களுக்கு  வெனிசுலா அரசாங்கத்தினால் வீடமைப்பு திட்டமொன்று கட்டிக்கொடுக்கப்பட்டது.

சுமார் 500 மில்லியன் ரூபா செலவில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் 400 வீடுகளை கொண்ட சாய்ந்தமருது வொலிவேறியன் கிராமமே  வெனிசுலா அரசாங்கத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

இதன் ஞாபகர்த்தமாகவே மறைந்த வெனிசுலா ஜனாதிபதி ஹூகோ சாவோசின் மறைவு சாய்ந்தமருது பிரதேசத்தில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் ஹூகோ சாவோசின் மறைவையொட்டிய இரங்கல் கூட்டம் .13 நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.

சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் வொலிவோரியன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில் கல்முனை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் எச்.எம்.எம்.ஹரிஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினா் ஏ.எம்.ஜெமீல் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X