2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பொத்துவில் விவகாரத்திற்கு சுமுகமான தீர்வு

Super User   / 2013 மார்ச் 12 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொத்துவில் விவகாரம் தொடர்பில் சுமுகமான தீர்வொன்றை பெறுவது என தீர்வு காணப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பொத்துவில் முஹூது மகா விகாரையின் அமைவிடம் தொடர்பில் அங்குள்ள பௌத்த மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தீர்வு காண்பதற்கான விசேட கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமின்  வேண்டுகோளுக்கிணங்க அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டி அல்விஸினால் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யட்டதாக நீதி அமைச்சு தெரிவித்தது.

இந்த பிரச்சினை தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டி அல்விஸ் குறித்த பகுதிக்கு நேரில் விஜயம் செய்து பிரதேச மக்களுடன் கலந்துரையாடி இறுதி தீர்வொன்றை மேற்கொள்வது என இதன்போது தீர்மானிக்ப்பட்டுள்ளது.

அத்துடன் பொத்துவில் மக்களின் காணி, மற்றும் எல்லைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அங்கு அமைந்துள்ள மணல் மலை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் விதிமுறைகளை மீறாமல் பேணிப் பாதுகாக்கப்படுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எல். அதாவுல்லா, பீ.தயாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹஸன் அலி,  பைசல் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், சரத் வீரசேகர மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.தவம் பொத்துவில் பிரதேச சபை தலைவர் எம்.எஸ்.எம். வாசித் தலைமையில் பொத்துவில் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்திற்கு பொத்துவில் முஹுது மகா விகாராதிபதியும் மாவட்ட செயலாளரின் அழைப்பின் பேரில் கலந்துகொண்டார்.
 





  Comments - 0

  • meenavan Tuesday, 12 March 2013 01:27 PM

    சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு மூலம் சுமுகமாக தீர்வாக பௌத்த தூபி அமைக்க அங்கீகாரம்.......?????

    Reply : 0       0

    vallarasu Tuesday, 12 March 2013 04:11 PM

    ஸ்ரீ.ல.மு. கா தலைவரே பொத்துவில் பற்றி நீங்கள் அறியமாட்டீர்கள். வெட்கத்தைப் பார்க்காமல் அமைச்சர் உதுமா லெப்பையிடம் அறிந்து கொள்ளுங்கள்...

    Reply : 0       0

    jeyantha hemapala Wednesday, 13 March 2013 04:28 AM

    முக்கியமானவர்களைக் காணவில்லையே...?

    Reply : 0       0

    ilyas Wednesday, 13 March 2013 08:07 AM

    அமைச்சர் அதாவுல்லாவை காணவில்லையே............?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X