2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சம்மாந்துறையில் பிள்ளையார் விக்கிரகத்தை காணவில்லை

Super User   / 2013 மார்ச் 13 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


சம்மாந்துறையிலுள்ள பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பிள்ளையார் விக்கிரகம் காணமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழைமை வாய்ந்த இந்த கோயிலின் முகப்பில் வழிபாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் விக்கிரகமே காணாமல் போயுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர்  சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்மாந்துறை தேசிய பாடசாலை மற்றும் நீதிவான் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு மத்தியிலேயே இந்த கோயில் அமைந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த சம்மாந்துறை பொலிஸார் இதுவரை யாரும் கைது செய்யப்பட்டவில்லை என்றனர்.

இந்த விடயம் தொடர்பாக கோயில் நிர்வாக சபையின் தலைவர் வீ.சுப்ரமணியம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரனின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

இதனையடுத்து, கோயிலுக்கு வருகை தந்த மாகாண சபை உறுப்பினர் நிலமையினை நேரில் பார்வையிட்ட பின்னர், சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்மாந்துறை பொலிஸாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


24 மணி நேரமும் நீதிமன்றத்தில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் இருந்து வருகின்ற நிலையில் இச்சம்பவம் நடைபெற்றிருப்பது வேதனைக்குரிய விடயமாகும் என மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இந்த பழமைவாய்ந்த காளி கோவில் கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0

  • Moon Wednesday, 13 March 2013 09:21 AM

    மனுசன காணமென்று இருக்கும் நேரத்தில இவர் பிள்ளையளைக் கணமாம்???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X