2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தென் கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 மார்ச் 14 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யூ.எல்.மப்றூக்


தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்தின் முன்றலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தல் 02ஆம் மற்றும் 03ஆம் வருட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தமக்கு இதுவரை வழங்கி வந்த விடுதி வசதிகளை பல்கலைக்கழக நிருவாகம் ரத்துச் செய்வதற்கு எடுத்துள்ள தீர்மானத்தினைக் கண்டித்தும் தொடர்ந்தும் தமக்கான விடுதி வசதிகளை வழங்குமாறு கோரியுமே மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 02ஆம், 03ஆம் வருடங்களில் கல்வி கற்று வரும் சுமார் 800 மாணவர்கள் இதனால் விடுதி வசதிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே – தற்போது கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0

  • vallarasu Thursday, 14 March 2013 08:10 AM

    இவர்களுக்கு விடுதி ஒன்று தேவை இல்லை, விடுதியில் த‌ங்குபவர்கள் இரவு வேளையில் அனாச்சார செயலில் ஈடுபடுகிறார்கள். என்னிடம் ஆதாரம் உள்ளது... நான் சும்மா சொல்லவில்லை.

    Reply : 0       0

    sunami Thursday, 14 March 2013 04:13 PM

    அது சரி... இரண்டாவதாக உள்ள புகைப்படம் அதனை தெளிவுபடுத்துகின்றது நண்பரே...

    Reply : 0       0

    Mona Saturday, 16 March 2013 02:46 PM

    ரொம்ப காலமெடுக்கும் தம்பிமார் & தங்கச்சிமார் ....
    நாங்களும் ஒரு காலத்துல... தெருவோரத்துல கைய ஏந்தி நின்றோம் (இதே பல்கலை கழகத்துல படிக்கிறப்போ...) இதெல்லாம் இந்த லைப்ல சஹஜமப்பா...

    இப்ப கொஞ்சம் குஜாலா இருக்கும். ஹஹஹஹ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X