2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வாடிகளை அமைத்துத் தருமாறு சின்ன உல்லை மீனவர்கள் கோரிக்கை

Suganthini Ratnam   / 2013 மார்ச் 14 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யு.எல்.மப்றூக்


பொத்துவில், சின்ன உல்லை பகுதியில் இயந்திரப் படகுகள் மூலம் கடற்றொழிலில் ஈடுபடுவோரின் உபகரணங்களை வைப்பதற்குரிய பாதுகாப்பான வாடிகள் இல்லை எனவும்; தங்களுக்கு பாதுகாப்பான வாடிகளை அமைத்துத் தருமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இப்பகுதியில் மீனவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் இம்மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சின்ன உல்லைப் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடும் 130 க்கும் அதிகமான படகுகள் உள்ளன. இங்கு தரிக்கும் இயந்திரப் படகுகளின் பல இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் இயந்திரங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இங்குள்ள ஓலைகளால் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற வாடிகளிலேயே வைக்க வேண்டியுள்ளதாக இந்தப் பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே, பாதுகப்பற்ற இவ்வாறான வாடிகளினுள் இருந்த தமது மீன்பிடி உபகரணங்கள் களவு போயுள்ளதுடன், தீ விபத்தில் சேதமடைந்துள்ளதாகவும் இம்மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தங்களுக்கு பாதுகாப்பான வாடிகளை அமைத்துத் தருமாறும் இம்மீனவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

இதேவேளை, இங்குள்ள மீனவர்களுக்கான மலசலகூட வசதிகளோ, குடிநீர் வசதிகளோ இந்தப் பகுதியில் செய்து கொடுக்கப்படாமையினால் இப்பகுதிக்கு தொழில் நிமித்தம் வருகின்ற கடற்றொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் கூறினர்.

சின்ன உல்லை பகுதியானது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகை தருகின்ற ஒரு இடமாக உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X