2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'காணி உபயோகத்தினை ஒழுங்கு செய்தல்' தொடர்பிலான செயலமர்வு

Kogilavani   / 2013 மார்ச் 15 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

 'காணி உபயோகத்தினை ஒழுங்கு செய்தல்' எனும் தலைப்பின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள விழிப்பூட்டல் செயலமர்வுகள் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேசசெயலகங்கள் மட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நிறைவேற்றல் தொடர்பிலான பிரதான விடயங்களில் ஒன்றாக இச்செயலமர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் இவ்வேளைத்திட்டத்தின் முதலாவது செயலமர்வு நேற்று வியாழக்கிழமை கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளராக அம்பாறை மாவட்ட காணி பயண்பாட்டு திட்ட உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.நஜீப் கலந்துகொண்டார்.

கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் இவ்வேளைத்திட்டத்தோடு தொடர்புடைய திணைக்கள பிரதிநிதிகளுக்காக இச்செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X