2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'விநாயகர் விக்கிரகம் திருடப்பட்டது மிகவும் வேதனையை தருகின்றது'

Kogilavani   / 2013 மார்ச் 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன், எம்.எஸ்.நூர்தீன்

'அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கிராமம் தமிழ் மக்களின் பூர்வீக வாழிடங்களில் ஒன்றாகும்.  இக்கிராமத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் ஆலயத்திலுள்ள விநாயகர் ஆலய விக்கிரகம் திருடப்பட்ட சம்பவமானது மிகவும் வேதனையை தருகின்றது.  இச்சம்பவத்தின் சூத்திரதாரிகளை கிழக்கு இந்து ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது' என கிழக்கு இந்து ஒன்றியத்தின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் விடுத்துள்ள கண்டனச் அறிக்கையில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அக்கண்டன அறிக்கையில்; அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இன்று இந்நாட்டில் பூர்வீக மதமாக உள்ள இந்து சமயத்தை சீர்குலைக்கும் செயற்பாடு பலராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி இந்து ஆலயங்களை உடைப்பதும், அவ்விடத்தில் விகாரைகளை ஸ்தாபிப்பதும் இவ் அரசின் நிகழ்ச்சி நிரலாக உள்ளது.
 
முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் இணைந்து வாழும் இக்கிராம சூழலில் இவ்வாலயத்தின் விக்கிரகங்கள் திருடப்பட்டமை இன முறுகளை ஏற்படுத்தும் ஒரு செயற்பாட்டை தூண்டும் வகையில் இடம்பெற்றிருக்கலாம் என தோன்றுகின்றது.
 
எனவே இவ்விடயம் சார்பாக பொலிஸ் பிரிவும் தீவிர விசாரணைகளை செய்து குற்றவாளிகளை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த முன்வரவேண்டும் என கிழக்கு இந்து ஒன்றியம் வேண்டுகோள் விடுகின்றது.
 
இவ்வாறான செயற்பாடுகள் மேலும் தொடருமானால் இந்துக்களை ஒன்று கூட்டி தீர்க்கமான முடிவினை இந்து மக்கள் எடுக்க கூடிய சூழல் உருவாக இடமுண்டு'  என கிழக்கு இந்து ஒன்றியம் தனது கண்டன அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X