2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

புதையல் தோண்டிய மூவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 18 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறையில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் 3 பேரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் உத்தரவி;ட்டார்

சந்தேக நபர்களை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து திருக்கோவில் சங்கமன்கண்டி பிரதேசத்திலுள்ள காட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் பின்புறமாக உள்ள காட்டில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த 6 பேரில்  3 பேர் தப்பியோடியுள்ள அதேவேளை, 3 பேரை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பொலிஸார் கைதுசெய்தனர். 

சந்தேக நபர்களிடமிருந்து அலவாங்கு, மண்வெட்டி, மஞ்சல் கலந்த தண்ணீர் என்பன ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடிய மூவரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X