2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மாணவர்களுக்கு ஒருவேளை நிறை உணவு வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 மார்ச் 19 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை நிறை உணவு வழங்கும் நிகழ்வு கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியில் இடம்பெற்றது.

ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் ஏ.ஆர்.எம்.யூசுப் தலைமையில் நேற்று முன்தினம் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மாணவர்களுக்கு பாடசாலை இடைவேளை நேரத்தில் ஒரு வேளைக்கு நிறை உணவு வழங்குவதன் மூலம் மாணவர்களிடையேயும் அவர்களின் பெற்றோர்களிடமும் நல்ல உணர்வுகளை ஏற்படுத்தும் நோக்குடனும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை உறுதிப்படுத்துவதுடன் மாணவர்களை முறையாக சாப்பிடப்பழக்குவதற்காகவும் இத்திட்டத்திம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ் உணவு வழங்கும் நிகழ்வுக்கு மாணவர்களின் பெற்றோர் வீடுகளில் சமையல் செய்து உணவுகளை பாடசாலைக்கு கொண்டு வந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X