2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அரிசி ஆலை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 02 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்தில் அரிசி ஆலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவரையும் தண்டப்பணமாக 1,500 ரூபாவை செலுத்துமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்ஏ.றிஸ்வி உத்தரவிட்டார்.

மத்தியமுகாம் நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள அரிசி ஆலை ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூவரையும் மத்தியமுகாம் பொலிஸார் கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

சட்டவிரோதமாக பணத்திற்கு சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டு இவர்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்ஏ.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இவர்களுக்கு தலா 500 ரூபா வீதம் 3 ஆயிரத்து 500 ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X