2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சட்டவிரோதமாக பறவைகளை வேட்டையாடியவர் கைது

Super User   / 2013 ஏப்ரல் 04 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யூ.எல்.மப்றூக், கனகராசா சரவணன்


சட்டவிரோதமான முறையில் பறவைகளை வேட்டையாடிய நபரொருவரை திருக்கோவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மயில்கள் உள்ளிட்ட பறவைகளை – துப்பாக்கி கொண்டு வேட்டையாடிய மேற்படி நபரை திருக்கோவில் போக்குவரத்துப் பொலிஸார் நேற்று புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.

இதன்போது வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் பறவைகளுடன் குறித்த நபர் காஞ்சிரம்குடாப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

மருந்துவத் தேவைக்காக எண்ணெய்களை தயாரிப்பதற்காகவும் இறைச்சிக்காகவுமே மேற்படி மயில்கள் மற்றும் பறைவைகளை – குறித்த நபர் வேட்டையாடியதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபர் இன்று வியாழக்கிழமை பொத்துவில் மாவட்ட நீதிபதி ஜ.என் றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது இவரை ஒரு இலட்சம் ரூபா பிணையில் நீதவான் விடுவித்துள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X