2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'கல்முனைப் பிரகடனம்' நிறைவேற்றம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 07 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


'கல்முனைப் பிரகடனம்' சர்வமத பெரியார்களின் ஆசிர்வாதத்துடன் சகல இன பிரதிநிதிகளினதும் ஏகோபித்த குரலில் பிரகடனம் செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்ட சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் மாவட்ட மாநாடு நேற்று சனிக்கிழமை கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் நடைபெற்றபோதே இப்பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

கல்முனை பிரகடனத்தில்

சமயத்துறவிகள், போதகர்கள், குருமார்கள், சமய அறிஞர்கள், மற்றும் சமயத்தலைவர்கள் மிகுந்த தார்முpகப் பொறுப்புணர்ச்சியுடன் சமாதானம், அன்பு,கருணை, பொறுமை போன்றவற்றை போதிக்க வேண்டும். மாறாக சமயங்களுக்கிடையில் குரோதத்தையும் வன்முறையையும் வளர்க்க துணை போகக்கூடாது.

2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் இனங்களுக்கிடையில் சமாதானம் ஏற்பட்டுள்ள நிலமையில் மீண்டும் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் சந்தேகங்களையும் வெறுப்புகளையும் தூண்டி அதன்மூலம் குறுகிய இலாபம் பெறும் சக்திகளை மக்கள் இனங்கண்டுமுறியடிக்க வேண்டும்.

சமயங்களின் நம்பிக்கைகள், சமயக்கிரிகைகள், சமய கலாசாரங்கள் போன்றவற்றை விமர்சிப்பதும் தடை செய்வதும் நிறுத்தப்படவேண்டும்.
சமயத்தலங்களை சேதப்படுத்துவது, நிந்திப்பது போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புராதன சின்னங்களை பாதுகாப்பது, புனித பூமிகளைப் பிரகடனப்படுத்துவது போன்ற செயற்பாடுகளின் போது அப்பிரதேசங்களில் பாரம்பரியமாக பல நூற்றாண்டுகளாக வாழும் மக்களின் நலன்களை அரசு பாதுகாக்க வேண்டும்.

போன்ற ஐந்து விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

பேரவையின் தலைவர் அல்ஹாஜ் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் சர்வமத பெரியார்கள், கல்விமான்கள் புத்திஜீவிகள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பத்திரிகையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X