2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அந்நூர் வித்தியாலய ஆசியர்கள் சுகயீன போராட்டம்

Super User   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலய ஆசியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை சுகயீன போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக குறித்த பாடசாலையின் செயற்பாடுகள் யாவும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

இந்த பாடசாலையின் அதிபர் மற்றும் சில ஆசிரியர்களுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிமை சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டிருந்தன.

இதனை கண்டித்தே இன்று அதிபர் மற்றும் 39 ஆசியர்கள் சுகயீன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாடசாலையின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டன. இதேவேளை பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் இரு ஆசியர்கள் மாத்திரமே இன்று கடமைக்கு சென்றுள்ளனர்.

ஆசிரியர்களின் சுகயீன போரட்டம் காரணமாக பாடசாலை மாணவர்களின் வரவு மிகக் குறைவாகவே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • VALLARASU.COM Friday, 20 September 2013 04:22 PM

    ஏன் செய்ய‌ மாட்டீங்க... மாதா மாதா சம்பளம் ஆண்டுதோறும் நிறைய விடுமுறைகள்... இதுவும் காணாமல் கவனயீன போராட்டத்தில் கூட விடுமுறை நாள்... இது எல்லாம் கடும் ஓவர்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X