2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்' விழிப்புணர்வூட்டும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு 'உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்' எனும் தொனிப் பொருளில் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் கருத்தரங்கும் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது.

வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்;.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பார்வையின் முக்கியத்துவம், கண்களை பாதுகாத்தல், கண்களில் ஏற்படும் தாக்கங்கள் பற்றிய விரிவுரையினை வைத்திய நிபுணர் டாக்டர் எம்.எம்.ஏ.ஏ.றிசாத் நிகழ்த்தினார்.

இதன்போது பொதுமக்களுக்கு கண் பரிசோhனை மேற்கொள்ளப்பட்டு இலவசமாக மூக்குக் கண்ணாடியும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் டாக்டர் வை.எல்.எம்.யூசுப் மற்றும் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .