2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வாழ்வாதார அபிவிருத்திக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா
 
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மலையடிக்கிராமம் -03, 04ஆம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்க பிரதி நிதிகளுக்கு வாழ்வாதார அபிவிருத்திக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையினை தொடர்ந்து மலையடிக்கிராமம்-03 மாதர் அபிவிருத்திச் சங்க காரியாலயத்தில் ஏ.எம்.றசூல் தலைமையில் நடைபெற்றது.
 
இந்த விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக ஜனாதிபதி கூட்டிணைப்பு உத்தியோகத்தர் எம்.எம்.ஏ.காதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த வைபவத்தில் 75 குடும்பங்களுக்கு வாழ்வாதார அபிவிருத்தி முயற்சிக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .