2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மலர் பறிக்கச்சென்ற மாணவர்கள் இருவர் மரணம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 14 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாமரை மலர் பறிக்கச்சென்ற இருவர் குளத்தில் விழுந்து மரணமடைந்துள்ள சம்பவமொன்று அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை, மஹஓய இத்தபொல வில்லதலாவ குளத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்விருவரின் சடலங்களும் மஹஓய வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.

13 வயதான மாணவர்கள் இருவரும் நாளை செவ்வாய்க்கிழமை தங்களுடைய வித்தியாலயத்தில் நடைபெறவிருக்கின்ற ஆசிரியர் தின வைப்பவத்திற்காக மலர்களை பறிக்கசென்றிருந்தபோதே குளத்தில் விழுந்து பலியாகியுள்ளதாக ஆரம்பக்கட்டவிசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .