2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மலைப் பாம்பு போல் காணப்பட்ட பெருங்குடலை சத்திர சிகிச்சை மூலம் அகற்றல்

Super User   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


நோயாளியின் வயிற்றில் மலைப் பாம்பின் உருவில் சுருண்டு காணப்பட்ட பெருங்குடல் ஒன்று சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு நோயாளி காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த சந்திர சிகிச்சை நிகழ்வு சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் இந்த அபூர்வ சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நோயாளியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குறித்த நோயாளியின் வயிற்றினுள் இருந்த பெருங்குடல் மலைப் பாம்பின் உருவில் ராட்சதமாக மாறி ஆபத்தான கட்டத்தில் இருப்பதை அவதானித்து வியப்படைந்தோம் என சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம்; தெரிவித்தார்.

இதனால் நாம் விரைந்து செயற்பட்டு மிகவும் நுட்பமாக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு அதனை முற்றாக அகற்றினோம் எனவும் குறிப்பிட்டார். இந்த செயற்பாடு மேலும் ஒரு மணி நேரம் தாமதமடைந்திருக்குமானால் நோயாளியின் உயிருக்கு அது ஆபத்தாக அமைந்திருக்கும்.

எனினும் நாம் மேற்கொண்ட அவசர நடவடிக்கை காரணமாக சுமார் நான்கு மணித்தியாலம் சத்திர சிகிச்சை மேற்கொண்டு அந்த மலைப் பாம்பின் உருவில் காட்சியளித்த ராட்சத பெருங்குடலை இறைவனின் உதவியால் வெற்றிகரமாக அகற்றி அவரை உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளோம் என்று டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் மேலும் தெரிவித்தார்.

தற்போது அந்த நோயாளி நலமுடன் இருப்பதாகவும் அவர் சுகமடைந்து வருகின்றார் எனவும் டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் மேலும் குறிப்பிட்டார்.வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருகின்ற சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் மிகவும் அசௌகரியமான நிலையில் இவ்வாறான சில அபூர்வ சத்திர சிகிச்சைகள் இதற்கு முன்னரும் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் அவர்களினால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .