2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர்களுக்கு தண்டம் விதிப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் கஞ்சா வைத்திருந்த நான்கு பேர் மற்றும் நிபந்தனையை மீறி ஆற்று மண் ஏற்றியவர் ஆகிய ஐந்து பேருக்கு எதிராக 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிவான் ரீ.சரவணராஜா மேற்கொண்டார். அக்ரைப்பற்று பொலிஸாரினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இவர்கள் நேற்று திங்கட்கிழமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் இவர்களுக்கெதிராக தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதேவேளைஇ  அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த வியாளக்கிழமை களவாடப்பட்ட சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான புடவைப் பொதி இன்று செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புடவை வியாபாரம் செய்யும் வியாபரி ஒருவர் எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு கொழும்பில் மொத்தமாக கொள்வனவு செய்யபட்ட புடவைப் பொதிகளை வழமையாக அனுப்பி வரும் லொறி ஒன்றில் அனுப்பி வைத்துள்ளார்.

அட்டாளைச்சேனை அறபா வித்தியால வீதியில் கடந்த வியாழக்கிழமை பொதிகளை இறக்கிவைத்துவிட்டு லொறியை திருப்பி வரும் போது சுமார் 10 நிமிடத்தினுள் இரு புடவைப் பொதிகளும் காணமல் போயுள்ளன.இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸாருக்கு முறைப்பாடு செய்து தேடுதல் நடத்தப்பட்ட போதும் பயனளிக்கவில்லை.

இதற்கான முழுப் பொறுப்பையும் லொறியின் உரிமையாளரே பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் குறித்த இரண்டு பொதிகளும் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த பாடசாலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .