2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் நீர்ப்பாசன வாரம் நடத்த ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம், மத்திய அரசாங்கத்தின் நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் நீர்ப்பாசன வாரத்தை நடத்தவுள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைசர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

நீர்ப்பாசன வாரத்தை நடத்துவது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நீர்ப்பாசன திணைக்கள உயரதிகாரிகள், விவசாய அமைப்புக்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'யுத்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை புனரமைத்து அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையினை எமது அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மூவின மக்களும் நன்மை பெறும் வகையில் மூன்று மாவட்டங்களிலும் நீர்ப்பாசன வாரங்கள் நடத்தப்பட்டு அதற்கான தீர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன.

இதற்கான நிதி எமது அமைச்சிலிருந்து மட்டுமல்லாது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் வெளிநாட்டிலிருந்தும் நிதியுதவி கிடைக்கப்பெறுகின்றது.

யுத்த காலத்தில் அதிகளவில் பாதிப்புக்குள்ளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை துரிதமாக கட்டியெழுப்புவதற்கு அதிகாரிகள் விவேகமாக செயற்பட வேண்டியுள்ளது.

இந்த நீர்ப்பாசன வாரத்தின் முதலாவது நிகழ்வு அட்டாளைச்சேனையில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போது வள்ளக் குண்டு வாய்க்கால், மீனோடைக்கட்டிலிருந்து வடிச்சலை ஆழப்படுத்தி, அகலப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன.

இந்தச் சந்திப்பில் கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வீ.திலகராஜா, அம்பாறை பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.வீரசிங்க, அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0

  • VALLARASU.COM Wednesday, 16 October 2013 05:25 AM

    இவர் ஊருக்கு சேவை செய்யப்போனால் அவர்கள் அதை தடுத்து விடுவார்கள். நாங்களும் செய்ய மாட்டோம், யாரையும் செய்ய விடவும் மாட்டோம். இதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என்று சொல்வார்கள்...!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .