2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உணவகங்கள், ஹோட்டல்கள் சோதனை

Super User   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை பிரதேசத்தின் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் திடீர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

தேசிய உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் இந்த நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது உணவுகளை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருந்திராத பல உணவகங்களும் ஹோட்டல்களும் கண்டுபிடிக்கபட்டு அவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்துடன் முதல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

சிரேஷ்ட பொதுமக்கள் சுகாதார பரிசோதகர் எம்.ஏ.ஜவ்பர் தலைமையில் பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .