2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

எலிஸபெத் மகாராணி – உப வேந்தர்கள் சந்திப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

லண்டன் பல்கலைக்கழக 'செனற் ஹவுன்ஸிலில் நடைபெற்ற பொதுநலவாய உப வேந்தர்களின் 100ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் இலங்கையின் உப வேந்தர்களும் கலந்துகொண்டனர்.

'எதிர்காலத்தை முன்வைத்து, வடிவமைத்தல், அபிவிருத்தி வழங்கல்'  எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர்கள் உட்பட 12 உப வேந்தர்கள் இலங்கையிலிருந்து கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பல்கலைக்கழக உப வேந்தர்களுக்கு  லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் இரண்டாவது எலிஸபத் மகாராணியால் விருந்துபசாரம் அளிக்கபட்டது. இதன்போது, இரண்டாவது எலிஸபெத் மகாராணியைச் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .