2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மகா போக நெற் செய்கை ஆரம்பம்

Super User   / 2013 ஒக்டோபர் 23 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்தில் பருவகால மழை ஆரம்பாமாகி உள்ளதால் மகாபோக நெற் செய்கைக்கான ஆரம்ப கட்ட வேலைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இம்முறை மாவட்டத்தில் 57,000 தொடக்கம் 65,000 ஹெக்டயர் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாய பிரதி பணிப்பாளர் எம்.எப்.ஏ.கலீஸ் தெரிவித்தார்.

கடந்த 15ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை நெற் செய்கைக்கான விதைப்பு வேலைகளை முன்னெடுக்க முடியும் எனவும், பிரதேச விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர் காரியாலயத்தின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உழவு மற்றும் விதைப்புகளுக்கு போதுமான பருவ மழை கிடைக்காவிடின் குளங்களிலிருந்து நீர் வழங்கி உரிய காலப்பகுதியினுள் நெல் விதைப்பு ஆரம்ப வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .