2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை நேற்று புதன்கிழமை மாலை பொலிஸார் கைதுசெய்தனர்.

அத்துடன், இவரிடமிருந்து 295 கிராம் கஞ்சாவை கைப்பற்றியதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அக்கரைப்பற்று 5ஆம் பிரிவு பரீட் வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரையே கைதுசெய்ததாகவும் அவர் கூறினார்.

இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .